ஜெயலலிதா கடைசியாக கலந்து கொண்ட அரசு விழா- தடுத்த சசிகலா

x

ஜெயலலிதா கடைசியாக கலந்து கொண்ட அரசு விழா- தடுத்த சசிகலா

ஜெயலலிதா கடைசியாக கலந்து கொண்ட அரசு விழா மெட்ரோ ரயில் சேவையின் துவக்கவிழா. இதற்க்காக தலைமைச்செயலகம் சென்றார் ஜெயலலிதா - ஆணையம்

உடல்நிலையை சுட்டிக்காட்டி விழாவில் பங்கேற்க வேண்டாம் என சசிகலா ஜெயலலிதாவிடம் வலியுறுத்தினார் - ஆணையம்

அப்போதைய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்து கொண்டிருப்பதால் அவசியம் போக வேண்டும் என சொல்லி புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா - ஆணையம்

விழாவுக்கு செல்வதற்கு அரைமணி நேரத்துக்க்கு முன்னதாக ஜெயலலிதாவுக்கு பாரசிட்டமால் மாத்திரை கொடுக்கப்பட்டுள்ளது. - ஆணையம்

விழாவில் பங்கேற்றிருந்தபோதே ஜெயலலைதாவுக்கு உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டிருந்தது - ஆணையம்

தலைமைச் செயலகத்திலிருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு காரை வேகமாக ஓட்டுமாறு டிரைவரிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். - ஆணையம்

சாலையோரம் நின்றிருந்த தொண்டர்களை பார்த்தவுடன் காரை மெதுவாக ஓட்டும்படி ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்- ஆணையம்

போயஸ் கார்டன் அடைந்ததும் காரில் இருந்து இறங்கும்போது நிலை தடுமாறியிருக்கிறார் ஜெயலலிதா, சமாளித்துக் கொண்டே சென்றிருக்கிறார்


Next Story

மேலும் செய்திகள்