ஜெயலலிதா சிகிச்சைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தடையாக இருந்ததாக அறிக்கையில் தகவல்

x

ஜெயலலிதா சிகிச்சைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தடையாக இருந்ததாக அறிக்கையில் தகவல்

உயர் மருத்துவ சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல அப்பல்லோ மருத்துவமனையும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் தடையாக இருந்தது தெரியவந்துள்ளது

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துசெல்வது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவியதாக கூறப்பட்டுள்ளது.

ஐ ஏ எஸ் அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் மற்றும் அரசு செயலாளர்களும் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என கூறியதற்கு ரிச்சர்ட் பீலே தற்போதைக்கு தேவையில்லை என கூறியதாக ஜெ தீபா தனது வாக்கு மூலத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்க அமைச்சரவையின் தீர்மானம் அவசியம் என்பது அப்போதய சுகாதாரத்துறை செயலாளருக்கு தெரிந்திருக்கும் எனவும் ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என தெரியவந்துள்ளது.

ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது எளிய நடைமுறை என்றாலும் அது இந்திய மருத்துவர்களை அவமதிப்பது போல என ராதாகிருஷ்ணன் கூறியது வியக்கத்தக்காத உள்ளது என ஆறுமுகசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன், மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் தான் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு தடையாக இருந்திருப்பது தெரியவருகிறது


Next Story

மேலும் செய்திகள்