அடித்து ஆடும் இஸ்ரோ... "670 வினாடிகள்.." - வெளியான முக்கிய தகவல்

x

நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜினிக் இஞ்சின் தயார் செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சிஇ 20 என்ற கிரயோஜனிக் இன்ஜின் சோதனை நடைபெற்றது. கடந்த 30- ம் தேதி 20 டன் எடை உந்து சக்திக்கான சிஇ 20 கிரயோஜினிக் என்ஜின் சோதனை 720 வினாடிகள் வெற்றிகரமாக நடந்த நிலையில் வெள்ளியன்று 670 வினாடிகள் நடந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்