"கோயம்பேடு பஸ் ஸ்டாண்டையே சுத்திட்டேன்-என்னங்க எப்ப பாத்தாலும் இதே கதையா?"-கொந்தளித்த பயணிகள்

x

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சொந்த ஊருக்குச் செல்வதற்கு பேருந்து கிடைக்காததால் பொதுமக்கள் தவித்தனர்.

மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக, கோயம்பேட்டுக்கு வந்தனர். தொடர் விடுமுறையை ஒட்டி, தினசரி இயக்கப்படும் 650 பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி. சேலம் போன்ற நகரங்களில் இருந்து 400 சிறப்பு பேருந்துகள் என மொதம் ஆயிரத்து 250 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இருந்தாலும், பெரும்பாலான பேருந்துகள் முன்பதிவு பேருந்துகளாக இருப்பதால், முன்பதிவு செய்யாத பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே, செஞ்சி செல்லும் பயணிகளை திருவண்ணாமலை பேருந்துகளில் ஏற்றவில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்