கொஞ்சம் இரக்கம் காட்டிய டெங்கு பாதிப்பு.. அதற்கு காரணம் இது தானா!

x

சென்னை மாநகரில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் அடையாறு, சோழிங்கநல்லூர் மற்றும் ராயபுரம் மண்டலங்களில், கடந்த வாரம் 40க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவான நிலையில், தற்போது 20க்கும் கீழாக பதிவாகி உள்ளது. குறிப்பாக, கிண்டி கலைஞர் கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனையில் 10 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 22 பேரும், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும் டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் இந்த மருத்துவமனைகளில் 30க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் மாலை நேரங்களில் மழைப்பொழிவு குறைந்ததே, டெங்கு பாதிப்பு குறைய காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. அதேசமயம், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்த வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்