தக்காளிக்கு இந்த நிலைமையா? | Tomato Price

x

கும்பகோணத்தில் தக்காளி கிலோ 35 ரூபாய்க்கு விற்றும் பொதுமக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டவில்லை. தக்காளி விலை நூறை கடந்து விற்பனையான நிலையில், கும்பகோணத்தில் தற்போது தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தக்காளியை வாங்க, பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டாததால், விற்பனை மந்தமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்