"ஒரு கிலோ வெங்காயம் இவ்வளவுதானா..?" - அடித்து பிடித்து வாங்கிய மக்கள்

x

மதுரவாயல், கோயம்பேடு பகுதிகளில் 1 கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால், பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கிச் சென்றனர். வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், லோடு ஆட்டோ மூலம், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ரூபாய்க்கு வணிகர்கள் விற்பனை செய்தனர். இதனால், அப்பகுதி மக்கள் முண்டியடித்துக்கொண்டு வெங்காயத்தை வாங்கிச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்