17 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

x

தமிழகம் முழுவதும் 17 டி.எஸ்.பி க்களை பணியிட மாற்றம் செய்து, டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கடலூர், விருதுநகர், திருச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றும் டிஎஸ்பிக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ள இடத்திற்கு உடனடியாக சென்று தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு டிஜிபி உத்தரவில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருக்கும் காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்