11 பகுதிகளுக்கு சர்வதேச அங்கீகாரம்... அதிகபட்ச "ராம்சர்" தளங்களுடன் தமிழகம் முன்னணி

நடப்பாண்டில் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள் நிலையில், 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராம்சர் தளங்களின் பட்டியலில்...
x
  • நடப்பாண்டில் மொத்தம் 28 இடங்கள் ராம்சர் தளங்களாக அறிவிக்கப்பட்டுள் நிலையில், 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராம்சர் தளங்களின் பட்டியலில் மேலும் 11 ஈரநிலங்களை இந்தியா சேர்த்துள்ளது.
  • இதில் தமிழ்நாட்டில் நான்கு தளங்கள், ஒடிசாவில் மூன்று தளங்கள், ஜம்மு காஷ்மீரில் இரண்டு தளங்கள் மற்றும் மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு தளம் என மொத்தம் 11 "ராம்சர்" தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
  • இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
  • இதனால் இந்தியாவில் அதிகபட்சமாக ராம்சர் தளங்கள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்