இன்ஸ்டாவில் இளம்பெண்களுக்கு காதல் வலை.. வீடியோ காலில் நிர்வாண கோலம்.! காதலன் செய்த கொடூர செயல்..

x

இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாகக் கூறி, பெண்ணிடம் வீடியோ காலில் பேசி, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம், அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். அப்போது காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி, வீடியோ கால் மூலமாக அந்தப் பெண்ணை நிர்வாணமாக பேச வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட, வீடியோக்களை வைத்து அருண்குமார் பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், அருண்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்