2070க்குள் இந்தியா..? ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன முக்கிய தகவல்

x

உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி 20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து உரையாற்றினார். உலகில் போரை விட ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமை காரணமாக ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், இதுபோன்ற உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார். புவி வெப்பமயமாதல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், 2070-ம் ஆண்டிற்கு கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்கவும் இந்தியா திட்டமிட்டு, நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார். வளர்ந்த நாடாக, சுய ஆற்றல் மிக்க நாடாக மாற இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்