அதிகரிக்கும் டெங்கு.. பீதியில் மக்கள்

x

ராமநாதபுரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ராமநாதபுரத்தில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, ஆங்காங்கே மழை நீர் கழிவுநீருடன் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு டெங்கு வார்டில் இதுவரை 16 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், டெங்குவால் பாதிக்கப்பட்ட பலர், பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்