பெண் பயணியின் உள்ளாடையில்.. கம்பி கம்பியாக இருந்த AU..! - ஏர்போர்ட்டில் அரண்ட அதிகாரிகள்

x

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 646 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.5

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று துபாயில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்திருந்த பையின் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர். அப்போது பையில் கம்பி வடிவில் தங்கத்தை மாற்றி நூதன முறையில் கடத்தி வந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்..

அதேபோன்று மலேசியாவில் இருந்து வந்த பெண் பயணி ஒருவர், தனது உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த தங்கத்தையும் கண்டுபிடித்தனர். இருவரிடம் இருந்தும் ரூபாய் 38 லட்சம் மதிப்பிலான 646 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்