கொடைக்கானலில் இனி இந்த இடத்திற்கு செல்ல கட்டணம் உயர்வு - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
கொடைக்கானலில் இனி இந்த இடத்திற்கு செல்ல கட்டணம் உயர்வு - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
பேரிஜம் பகுதிக்கு செல்ல வனத்துறை அனுமதி சீட்டு பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்திய பிறகு சுற்றுலாப்பயணிகள் சென்று வருகின்றனர். கார் ஒன்றிற்கு 200 ரூபாயும், வேன்,டெம்போ உள்ளிட்ட வாகனங்களுக்கு 300 ரூபாயும் வனத்துறையினர் கட்டணமாக நிர்ணயித்து இருந்தனர். இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் கார் ஒன்றிற்கு 300 ரூபாயும், வேன் மற்றும் டெம்போ வாகனத்திற்கு 600 ரூபாயும் உயர்த்தி வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பேரிஜம் ஏரியில் முறையான அடிப்படை வசதிகள் கூட இல்லை என குற்றம்சாட்டிய வாகன ஓட்டிகள், பழையை கட்டணத்தை நடைமுறை படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, பேரிஜம் ஏரிக்கு சென்று வந்த பிறகு, மோயர் சதுக்கம், பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை செல்ல
கட்டணம் செலுத்த வேண்டாம் என, மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார் மீனா தெரிவித்துள்ளார்.