கபடி விளையாடி முடித்த உடனே களத்தில் வீரரின் உயிர் பிரிந்த சோகம் கதறிய சக வீரர்கள்..

x

கபடி விளையாடி முடித்த உடனே களத்தில் வீரரின் உயிர் பிரிந்த சோகம் கதறிய சக வீரர்கள்..

கும்பகோணம் அருகே கபடி வீர‌ர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோயில் பகுதியில்

நடைபெற்ற கபடி போட்டியில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான கபடி அணிகள் பங்கேற்றன. போட்டி முடிந்த சற்று நேரத்தில் நன்னிலத்தை சேர்ந்த கபடி வீர‌ர்

செந்திலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில், சிகிச்சை பலனின்றி

பரிதாபமாக உயிரிழந்தார். கபடி போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை வென்றுள்ள கபடி வீர‌ர் செந்திலின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்