தேர்தல் நேரத்தில் வெளியான சர்வதேச ரிப்போர்ட்... அடித்து சொன்ன IMF..! வந்தது நிம்மதி பெருமூச்சு
2024இல் இந்திய பொருளாதாரம், முன் கணிப்புகளை
விட அதிக வேகத்தில் வளரும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.
IMF எனப்படு சர்வதேச நிதியத்தின் துணை நிர்வாக
இயக்குனர் ஒகமுரா, டோக்கியோவில் நடைபெற்ற
ஆசிய நாடுகளுக்கான வரிகள் தொடர்பான 13ஆவது
மாநாட்டில் உரையாற்றினார். பல்வேறு சவால்களுக்கு
இடையே, உலக பொருளாதார வளர்ச்சி 3.1 சதவீதமாக அதிகரிக்க உள்ளதாக கூறினார். உலக பொருளாதார வளர்ச்சியின் எஞ்சினாக ஆசியா செயல்படுவதாக கூறினார். 2024இல் உலக பொருளாதார வளர்ச்சியில்
ஆசிய நாடுகளின் பங்களிப்பு 60 சதவீதமாக இருக்கும் என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் ஆசிய நாடுகள் சரியான பாதையில் செல்வதாக குறிப்பிட்டுள்ளார். பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், இந்தியா சிறப்பான இடத்தில் உள்ளதாகவும், மிக வேகமாக வளரும் நாடாக தொடரும் என்று கூறியுள்ளார். 2024இல் இந்திய பொருளாதார வளர்ச்சி
பற்றிய முன் கணிப்பை IMF 6.5 சதவீதத்தில் இருந்து
6.8 சதவீதமாக உயர்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.