"இனி இதுபோன்ற குற்றங்கள் செய்தால்..." - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போலி சான்றிதழ் தயாரித்து, பணம் பெற்று வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என..
x

போலி சான்றிதழ் தயாரித்து, பணம் பெற்று வேலை வாங்கி தருவதாக மோசடி செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கொளத்தூரை சேர்ந்த சாந்தி என்பவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது.


மனுதாரர் குற்றச்சாட்டின்படி பாபு என்பவர் போலி வழக்கறிஞர் என்பது சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் மூலம் உறுதியாகி இருப்பதாக கூறிய நீதிபதிகள், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்த பாபுவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்ய ஆணையிட்டனர்.


அவரது பள்ளிப்படிப்பு முதல் கல்வித் தகுதி குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் போலி சான்றிதழ் தயாரிப்பதும், வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்யும் விவகாரம் காளான் போல் முளைப்பதாக வேதனை தெரிவித்தனர்.


இதுபோன்ற குற்றங்களை காவல்துறை இரும்பு கரம் கொண்டு அடக்குவதோடு, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்