ஊராட்சி தலைவிகளுக்கான கூட்டத்தில் கணவர்கள்.. கோபமடைந்த அமைச்சர் பொன்முடி உடனடி நடவடிக்கை
ஊராட்சி தலைவிகளுக்கான கூட்டத்தில் கணவர்கள்.. கோபமடைந்த அமைச்சர் பொன்முடி உடனடி நடவடிக்கை
கருத்தரங்கு கூட்ட அரங்கில் அமர்ந்திருந்த பெண் ஊராட்சி மன்ற தலைவிகளின் கணவர்களை அரங்கில் இருந்து வெளியேற்ற அமைச்சர் பொன்முடி உத்தரவிட்டார்.
விழுப்புரத்தில் பட்டியலின மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்க, துரை.ரவிக்குமார்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி
வைத்து சிறப்புரையாற்றினார். கூட்டம் நடைபெற்ற போது, பெண் ஊராட்சி தலைவிகளின் கணவர்கள், இருக்கையில் அமர்ந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அமைச்சர் பொன்முடி
அவர்களை வெளியேற உத்தரவிட்டார். அமைச்சர் உத்தரவால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.