சென்னையில் மனைவியை கொன்று சடலத்துடன் 2 நாட்கள் வாழ்ந்த கணவன் - அதிர வைத்த சம்பவம்

x

அம்பத்தூர், கல்யாணபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சாரம்மாள். 25 வயதான இவருக்கு, ஏற்கனவே திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். இதனை மறைத்து, அம்பத்தூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவரை திருமணம் செய்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட ஜான்சன், ஆவடியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி, ஜான்சனின் வீட்டை கண்டுபிடித்து வந்த சாரம்மாள், அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான்சன், சாரம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். சடலத்தை 2 நாட்களாக வீட்டில் வைத்திருந்த நிலையில், நேற்று காவல்துறையில் சரணடைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்