குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு..நடுரோட்டில் மண்வெட்டியால் மனைவியை தாக்கிய கொடூர கணவன் | Tamilnadu

x

ராமநாதபுரத்தில், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்து தப்பியோட முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர். முதுகுளத்தூர் அருகே உள்ள திருவரங்கம் கிராமத்தை சேர்ந்த செல்வம் - லட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி விட்டு வீடு திரும்பிய லட்சுமியை, அவரது கணவர் செல்வம் வழிமறித்து, மண்வெட்டியால் தாக்கினார். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்