காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் அனுமதி?

x

காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் அனுமதி?

சென்னை பெரம்பூரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மீது ஓட்டேரி, வியாசர்பாடி, உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஓட்டேரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்த குற்றத்திற்காக ஆகாஷை போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றதாக தெரிகிறது. தொடர்ந்து ஆகாஷ் கீழ்ப்பா க்கம் அரசு மருத்துவமனை யில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்