பள்ளி பாடப் புத்தகங்களில் ராமரின் வரலாறு - NCERT குழு பரிந்துரை

x

பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமரின் வரலாறு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள NCERT-யின் சமூக அறிவியல் நிபுணர் குழு, கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெறச் செய்யலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தெரிகிறது. சங்க கால இந்தியா என்ற பிரிவில் ராமாயணம், ராமர் அயோத்தியை ஆட்சி செய்த விதம், வனவாசம், உள்ளிட்டவை இடம்பெறும் வகையிலான பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில் பள்ளி பாட புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்