ஹிஜாபை அகற்றி தேர்வெழுத "பரீட்சையின் பாதியில் என்னை எழுப்பினர்.." - இளம்பெண் வேதனையில் பேச்சு

x

திருவண்ணாமலையில், ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வெழுதிய இளம்பெண்ணை தேர்வறையில் இருந்து வெளியேற்றி தேர்வெழுத அனுமதிக்காத நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில், பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இந்தி தேர்வுகள் நடைபெற்றன. அதில் ஹிஜாப் அணிந்து மத்தியமா தேர்வு எழுதிய இளம்பெண் ஒருவரை, தேர்வறை கண்காணிப்பாளர் ஹிஜாப் ஆடையை அகற்றி தேர்வெழுத அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்ததையடுத்து, தேர்வறையில் இருந்த கண்காணிப்பாளர்கள் அவரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் அங்கு திரண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்