தமிழகத்தில் இடி, மின்னலுடன் கனமழை

x

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. ஆலங்குடி, கொத்தமங்கலம், மறமடக்கி, கீரமங்கலம், செரியலூர் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டாரத்தில் 2வது நாளகா பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. திருப்புவனம், ஆடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை வெளுத்து வாங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், மக்களும் சிரமத்திற்கு ஆளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்