தமிழகத்தில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை

x

தமிழகத்தில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை | Tamilnadu | Heavy Rain

ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு சில இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. இருப்பினும், குளிர்ந்த சூழல் நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் இரண்டாவது நாளாக இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. தண்டக்குப்பம், வெளாம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்தது. நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.https://youtu.be/VYkohKgXDGg

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை

சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இதானல், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்