நாட்டை உலுக்கிய கோர விபத்து - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

குஜராத் தொங்கு பாலம் விபத்து தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க கோரிய பொதுநல மனுவை, நவம்பர் 14ம் தேதி பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் தொங்கு பாலம் விபத்திற்குள்ளானதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க உத்தரவிட கோரி, வழக்கறிஞர் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

அதில், நாடு முழுவதும் உள்ள பழமையான தொங்கு பாலங்கள் தொடர்பாக விரிவான பாதுகாப்பு தணிக்கை செய்யவும், தொங்கு பாலத்தின் விபத்துக்கள் குறித்து நிரந்தர பேரிடர் விசாரணை குழுவை உருவாக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி லலித் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது.

வழக்கறிஞனின் முறையீட்டை பரிசீலத்த நீதிபதிகள், தொங்கு பாலம் விபத்து தொடர்பான பொதுநல மனுவை நவம்பர் 14-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்