"உதவி செய்தவரையே" கொல்ல திட்டம் | பட்டா கத்தியுடன் மிரட்டிய கும்பல் | வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரை 12 பேர் கொண்ட கும்பல் தாக்கி விட்டு பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இரும்புலியூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற அப்பு, ராஜ்மோகன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை பிடித்து விசாரித்த போது விக்னேஷ் மது போதையில் சில நாட்களுக்கு முன்பாக விபத்து ஒன்றில் சிக்கி உள்ளார். அப்போது அவருக்கு உதவிய லிங்கமூர்த்திக்கும் விக்னேஷூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கொல்ல திட்டமிட்ட விக்னேஷ் தன் கூட்டாளிகளுடன் சென்றதும் உறுதியானது. இதன்பேரில் மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்