குரூப் 1, 2 ரிசல்ட்ஸ்.. TNPSC வெளியிட்ட அறிவிப்பு | TNPSC | Group 1 | Group 2 | Results

x

குரூப் 2 பணியிடங்களில் 5 ஆயிரத்து 777 பேரை தேர்வு செய்வதற்கான முடிவுகள், வருகிற 12 ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதேபோல் 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 பணியிடங்களுக்கான முதன்மை வனக்காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட உரிமையியல் நீதிபதி பணியில் 245 பேரை நியமனம் செய்வதற்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் உள்ளிட்ட15 தேர்வுகளின் முடிவுகள் பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடுவதற்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்