மாணவர்களை வைத்து பள்ளியை சுத்தம் செய்த அரசுப்பள்ளி - வெளியான அதிர்ச்சி வீடியோ

x

மாணவர்களை வைத்து பள்ளியை சுத்தம் செய்த அரசுப்பள்ளி - வெளியான அதிர்ச்சி வீடியோ


ஒசூரில் அரசு பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் இராயக்கோட்டை சாலையிலுள்ள ஆர்.வி அரசு ஆண்கள்

மேல்நிலைப்பள்ளியில், வரும் வாரத்தில் கல்வி சம்பந்தமான ஆய்வுகள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி அப்பள்ளி வளாகம், மாணவர்களை கொண்டே சுத்தம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி

மாணவ, மாணவிகளை தூய்மை பணியில் ஈடுபடுத்த கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை மீறி அரசு பள்ளியே மாணவர்களை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபடுத்தியது

அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்