"சனாதன தர்மம், இந்து மதம்" குறித்து ஆளுநரின் பேச்சு- "RTI-ல் வராது" - கவர்னர் மாளிகை

x

"சனாதன தர்மம், இந்து மதம்" குறித்து ஆளுநரின் பேச்சு- "RTI-ல் வராது" - கவர்னர் மாளிகை

சனாதன தர்மம், இந்து மதத்தின்அர்த்தம் குறித்த ஆளுனரின் பேச்சுகள் தகவல் அறியும் சட்டத்தில் வராது தமிழக ஆளுனர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சனாதன தர்மம், இந்து மதம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சென்னையை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகஸ்ட் 19ஆம் தேதி மனு அனுப்பியுள்ளார்.

அதில், சனாதன தர்மம் குறித்து அதிகம் பேசும் நபராக இருப்பதால், அது குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க சரியான நபர் என குறிப்பிட்டு, 19 கேள்விகளை மனுவில் முன்வைத்துள்ளார்.

அதன்படி, சனாதன தர்மத்தின் கொள்கைகள் என்ன, உருவாக்கியவர் யார், வேறு எந்த நாட்டிலோ பின்பற்றப்பட்டுள்ளதா, பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்து என்ற சொல் இடம் பெற்றுள்ளதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் நீங்கள் உறுப்பினரா, தமிழக அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பேச அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவியின் சார்பு செயலாளர் சி. ரமா பிரபா, ஆளுனரிடம் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பிய கேள்விகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வராது என்றும், அது தொடர்பாக தகவல்கள் ஆளுனரின் செயலகத்தில் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்