தமிழக அரசின் பொதுபாடத்திட்டம்... "பின்பற்ற வேண்டியதில்லை" - ஆளுநரின் சுற்றிக்கையால் பரபரப்பு

x

தமிழ்நாடு அரசின் பொது பாடத்திட்டத்தை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பின்பற்ற வேண்டியதில்லை என ஆளுநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசு அனைத்து கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான பொது பாடத்திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், தமிழக உயர் கல்வித்துறை மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், "யுஜிசி விதிகளின்படி, நாட்டில் உள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், தங்களுக்கான பாடத்திட்டத்தை தாங்களே வடிவமைத்து கொள்ளலாம் என்கிற போது, தமிழக உயர்கல்வித்துறை வடிவமைத்துள்ள பொது பாடத்திட்டம் முறையை ஏற்க தேவை இல்லை என்று கூறியுள்ளார். கல்வி பொதுப்பட்டியலில் உள்ளதால், இதில் மாநில அரசு தன்னிச்சையாக, பொது பாடத்திட்ட முறையை கொண்டு வர முடியாது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்