பைக் மீது மோதிய அரசு பேருந்து - கர்ப்பிணி பெண் வயிற்றிலிருந்த சிசுக்கு நேர்ந்த பரிதாபம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நிறைமாத கர்ப்பிணி, கணவருடன் பைக்கில் சென்றபோது, அரசு பேருந்து மோதி, வயிற்றிலிருந்த சிசு உயிரிழந்தது.
பெரிய புதூரை சேர்ந்த ராபர்ட் மனைவி அனிதா,
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.
தனது உடல் பரிசோதனைக்காக கணவருடன் பைக்கில், பெரிய புதூர் பகுதியில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது,
காட்பாடி மேம்பாலம் அருகே வந்த அரசு பேருந்து மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் காயம் அடைந்த நிலையில்,
அவர்கள் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் அனிதா வயிற்றில் இருந்த 9 மாத குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்.
Next Story