அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் - முன் வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்

x

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க கோரி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேரணி நடத்தினர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். அரசு போக்குவரத்து கழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும், ஊழியர் பற்றாக்குறையினால் சுமார் ஆயிரத்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நீண்ட காலமாக அகவிலைப்படி வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்