"கிடைத்தது விசா" அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், உடல் நலக்குறைவு காரணமாக, சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...
x

"கிடைத்தது விசா" அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்

இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், உடல் நலக்குறைவு காரணமாக, சில தினங்களுக்கு முன்பு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்று பகுதியில் சிறிய ரத்தக்கசிவு இருப்பது தெரிய வந்த‌து. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல உள்ளதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவருக்கு விசா கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்ட நிலையில், கடந்த வாரம் நடிகர் டி.ராஜேந்தர் அமெரிக்கா செல்ல விசா கிடைத்ததுள்ளது. இதையடுத்து, இன்று இரவு 9.30 மணிக்கு தனது குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல டி.ராஜேந்தர் திட்டமிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்