மெட்ரோ பயணிகளுக்கு குட் நியூஸ்.. ஆன்லைனில் டிக்கெட் 20% Offer - "இந்த app போதும் புக் செய்ய.."

x

சென்னையில் மெட்ரோ பயணிகளின் வசதிக்காக வாட்ஸ் அப்பை தொடர்ந்து paytm செயலி மூலம் டிக்கெட் பெறும் முறையை சென்னை மெட்ரோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னை நந்தனத்தில் Paytm ‌செயலி மூலம் மெட்ரோ டிக்கெட் பெறும் வசதியை சென்னை மெட்ரோ மேலாண் இயக்குநர் சித்திக் அறிமுகம் செய்து வைத்தார். Paytm செயலியில் transit பகுதியில் உள்ள ரீசார்ஜ் ஆப்ஷனில், புறப்படும் மற்றும் சேரும் இடத்தை பதிவு செய்து, டிக்கெட் பெறலாம். முன்பதிவில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் வரை பெறும் வசதி உள்ள நிலையில், 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சித்திக், பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து 6 பெட்டிகள் கொண்ட 28 இரயில் தொடர்களை வாங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் 2-ம் கட்ட பணிகளில் தூண்கள் அமைக்கும் பணி அடுத்தாண்டு இறுதிக்குள் நிறைவுறும் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்