கோயில் கருவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு.. முன்னாள் ஊராட்சி தலைவரின் செயலால் பரபரப்பு

திருவண்ணாமலை அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோயில் கருவறைக்குள் சென்று பூட்டிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது...
x

விளை சித்தேரி கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை10 வகையறா சேர்ந்து நடத்துவது வழக்கம். தற்போது அதே கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் வகையறாவுக்கு, திருவிழா நடத்த தற்போது உள்ள ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்தும், அதே பகுதியில் உள்ள அம்மசார் வளையல் அம்மன் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதாகக் கூறியும், தனசேகரன் கோயில் கருவறைக்குள் சென்று பூட்டிக்கொண்டு தற்கொலை செய்யப்போவதாக கூறினார். தகவலறிந்து வந்த போலீசார் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை வெளியே கொண்டு வந்தனர். மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டும் கோயில் கருவறைக்குள் சென்று தனசேகரன் தற்கொலை முயற்சி விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்