பொண்ணு இங்கே..பையன் அங்கே..!வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம்

அமெரிக்காவில் வசிக்கும் இளைஞரும், தமிழகத்தில் வசிக்கும் இளம்பெண்ணும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ள அனுமதி..
x

பொண்ணு இங்கே..பையன் அங்கே..! வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கொடுத்த உத்தரவு

அமெரிக்காவில் வசிக்கும் இளைஞரும், தமிழகத்தில் வசிக்கும் இளம்பெண்ணும் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வம்சி சுதர்ஷினி என்பவரும், அமெரிக்க குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசிக்கும் ராகுல் எல் மது என்பவரும், இந்தியாவில் நடைமுறையிலுள்ள சிறப்பு திருமண சட்டத்தின்படி திருமணம் செய்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இந்த விண்ணப்பம் மீது முடிவெடுப்பதற்கான கால அவகாசம் முடிந்த பிறகும் சார்பதிவாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேநேரத்தில் இந்தியா வந்திருந்த ராகுல் எல் மது அமெரிக்க திரும்பிவிட்ட நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் தாங்கள் திருமணம் செய்து கொள்ளவும், அதனை சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்துகொள்ளவும் வம்சி சுதர்ஷினி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என தெரிவித்ததோடு, திருமணத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்திக் கொள்ளவும், அதனை சிறப்பு திருமண சட்டத்தின்படி பதிவு செய்யவும் அனுமதியளித்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்