டெங்குவுக்கு பலியான சிறுமி - அச்சத்தில் உறைந்த மதுரை மக்கள்

x

டெங்குவுக்கு பலியான சிறுமி - அச்சத்தில் உறைந்த மதுரை மக்கள்


மதுரை சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை கடந்த 19ஆம் தேதி டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுவரை மருத்துவர் கண்காணிப்பில் இருந்த சிறுமி, சிகிச்சை

பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் பெற்றோர், உறவினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மதுரையில் ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு

பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு பரவலால் அச்சத்தில் உறைந்துள்ள

மதுரை மாநகர மக்கள், மாவட்ட சுகாதாரத்துறை டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்