தமிழகத்தில் கொட்டி தீர்த்த பேய் மழை..வாகன ஓட்டிகள் அவதி

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் வாகனங்கள் தட்டுத் தடுமாறி சென்றன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்த‌து. தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்த‌தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், எட்டுப்பட்டி, அக்ராஹரம், நெருப்பாண்ட குப்பம், ஆட்டியனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்க்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த‌த்து. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதே போன்று, பாப்பிரெட்டிபட்டி, மெணசி, வடகரை, இருளப்பட்டி, பொம்மிடி, சித்தேரி வாச்சாத்தி உள்ளிட்ட கிராமங்களிலும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோசன நிலை காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்