கையில் கஞ்சா செடி; வாயில் கஞ்சா புகை...! கெத்து காட்டி வீடியோ போட்ட இளைஞர்...! தட்டி தூக்கிய போலீஸ்

x

கையில் கஞ்சா செடி; வாயில் கஞ்சா புகை...! கெத்து காட்டி வீடியோ போட்ட இளைஞர்...! தட்டி தூக்கிய போலீஸ் .

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே கஞ்சா புகைப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய இளைஞரை போலீர் கைது செய்தனர். சமூக வலைதளங்களில் இளைஞர் ஒருவர் கஞ்சா புகைக்கும் விடியோ பரவியதை அடுத்து, கண்டாச்சிபுரம் போலிசார் விசாரணை நடத்தி, அதில் இருப்பது வி.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பதைக் கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, சென்னை காசிமேட்டில் மீன் வெட்டும் தொழில் செய்து வரும் அவர், 2 ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த வீடியோவை இப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்