சோப்பிற்குள் கஞ்சா... புழல் சிறையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார்

x

புழல் சிறையில் கஞ்சா, செல்போன்கள் வைத்திருந்ததாக 11 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணை மற்றும் தண்டனை சிறைகளில் உள்ள சிறைக் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கைதிகள் மறைத்து வைத்திருந்த 50 கிராம் கஞ்சா, 2 செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சிறைக் கைதியை பார்க்க வந்த மகேஷ் என்பவர், சோப்பிற்குள் மறைத்து கொடுக்க முயன்ற கஞ்சாவை காவலர்கள் பறிமுதல் செய்ததுடன், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்