ஆன்லைன் செயலி மூலம் நட்பு.. பெண்களிடம் நெருங்கிப் பழகி பணம் பறிப்பு - விருதுநகரைச் சேர்ந்தவர் கைது

x

ஆன்லைன் செயலி மூலம் நட்பு.. பெண்களிடம் நெருங்கிப் பழகி பணம் பறிப்பு - விருதுநகரைச் சேர்ந்தவர் கைது

ஆன்லைன் செயலி மூலம் பெண்களிடம் நெருங்கி பழகி, அவர்களிடம் பணம் பறித்த நபரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் ஆப் மூலம் பழகிய நபர், தங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அவற்றை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிப்பதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் சிலர் புகார் கொடுத்தனர்.

அந்த நபரை தொழில்நுட்ப உதவியுடன் போலீசார் தேடியபோது, அவர் விருதுநகர் மாவட்டம், கூம்பப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பது தெரியவந்தது.

பல பெண்களை அவர் ஏமாற்றி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வரும் காலங்களில் இதுபோன்று தனிப்பட்ட தகவல்களைக் கொடுத்து, பணத்தை இழக்கக்கூடாது என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்