சிறையில் பூத்த நட்பு... கைகோர்த்த களவாணிகள்...

x

கோவை , மசக்களிபாளையம்

ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை...

பூட்டை திறந்து நகையை திருடிய பெண்கள்...

சிறையில் பூத்த நட்பு... கைகோர்த்த களவாணிகள்...

பூட்டிய வீடுகளை குறிவைத்து களவாடிய பயங்கரம்...

வாடகைக்கு வீடு தேடுற மாதிரி நோட்டமிட்டு பூட்டுன வீட்டுல இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுருக்கு இந்த பலே திருட்ட செஞ்சது நாம நினைக்குற மாதிரி ஆண்கள் இல்ல... இரண்டு பெண்கள்... களவு ராணிகள் காவல்துறையிடம் சிக்கியது எப்படி?


ஒரே இரவில் நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து 102 சவரன் நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தை நமது குற்றச்சரித்திரம் நிகழ்ச்சியில் சமீபத்தில் பதிவுச் செய்திருந்தோம்.

பிரீத் (வாசுதேவநல்லூர் கொள்ளை சம்பவம் விசுவல்) + நியூஸ் மான்டேஜ்

தாய் தந்தை மகன் என ஒரு குடும்பமே கொள்ளையடிப்பதை குலதொழிலாக செய்துவந்திருக்கிறார்கள். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் நடந்த இந்த சம்பவத்தை போலவே கோவை மசக்களிபாளையத்திலும் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேரியிருக்கிறது.

செங்குட்டை மேற்கு வீதி பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். 60 வயதாகும் இவர் ஆவின் பால் டீலராக வேலைப்பார்த்து வந்துள்ளார். சதாசிவம் வெளியில் செல்லும்போதெல்லாம் வீட்டை பூட்டி சாவியை ரகசிய இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம்…

சம்பவத்தன்றும் வெளியில் சென்று வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், வீட்டின் அலமாறியில் வைக்கப்பட்டிருந்த பணமும் பீரோவிலிருந்த நகையும் காணாமல் போயிருக்கிறது. இதனால் பதறிபோனவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். சந்தேகமடைந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அதில்தான் காவல்துறைக்கு நகைகள் காணாமல்போனதற்கான துப்பு கிடைத்திருக்கிறது.

சிசிடிவி காட்சியில் மாஸ்க் அணிந்திருந்த பெண் ஒருவர் சதாசிவம் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தது பதிவாகியிருந்தது. மாஸ்க் அணித்த பெண்ணை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கிய போலீசார் அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்துபார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அந்த பெண் மற்றொரு பெண்ணுடன் வாடகை காரில் வந்து சென்றது தெரியவந்துள்ளது.

உடனே கார் நம்பரை வைத்து அவர்கள் இருவரையும் டிராக் செய்து போலீசார் மடக்கி பிடித்திருக்கிறார்கள். அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் சதாசிவம் வீட்டில் அவர்கள் நகை பணம் கொள்ளையடித்தது உறுதியாகியிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர் ரமணி மற்றும் வினையா. கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த ரமணிக்கு 33 வயதுதான் இருக்கும். ஆனால், இந்த வயதிலேயே இவர்மீது தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளன.

வாடகைக்கு வீடு பார்ப்பதுபோல் ஊர் ஊராக செல்லும் ரமணி ஆளில்லா வீடுகளை குறிவைத்து கைவரிசை காட்டியிருக்கிறார். அதிலும் பூட்டை கஷ்டப்பட்டு உடைக்காமல் லாவகமாக லாக்கை திறந்து சத்தமில்லாமல் காரியத்தை முடிப்பதில் ரமணி கைத்தேர்ந்தவர்.

குறிப்பாக ஆளில்லா வீடுகளை நோட்டமிட்டு தகவல் கொடுப்பதற்காக தமிழகத்தில் நெட்வொர்க்கையே நடத்திவந்திருக்கிறார் ரமணி.

கோவை, நாமக்கல், திருப்பூர், ஈரோடு என பல இடங்களில் கைவரிசை காட்டி வந்த ரமணி சமீபத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் சிக்கி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அப்போதுதான் போக்சோ வழக்கு ஒன்றில் கைதாகி சிறையிலிருந்த வினையாவோடு ரமணிக்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. தோழிகள் இருவரும் எதிர்காலம் குறித்து சிறையிலேயே திட்டம்போட்டிருக்கிறார்கள்.

உளவாளி கொடுத்த தகவலின்படி சம்பவத்தன்று ரமணியும் வினையாவும் சதாசிவம் வீட்டிற்கு காரில் வந்திருக்கிறார்கள். வினையா காரிலிருந்து உளவு பார்க்க ரமணி மட்டும் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த சாவியை வைத்தே கதவை திறந்திருக்கிறார். பிறகு வீட்டிருந்த 15 பவுன் நகை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி கதவை பூட்டி சாவியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு தப்பிச்சென்றிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக இருவர்மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் 15 சவரன் நகையை மீட்டு இருவரையும் சிறையிலடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்