3000 கிலோ ஆட்டுக்கறி, அரிசி.. - 60 பிரம்மாண்ட அண்டா - கமகமக்கும் பிரியாணி.. ஏழைகளுக்கு இலவசம்

x

கோவை மாவட்டத்தில் மிலாடி நபியை ஒட்டி 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஆட்டிறைச்சியைக் கொண்டு மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டது... இறை தூதர் முகமது நபியின் பிறந்த நாளான இன்று உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள 135 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் அருகே 60 பிரம்மாண்டமான அண்டாக்களில் 3 ஆயிரம் கிலோ அரிசி, 3 ஆயிரம் கிலோ ஆட்டிறைச்சியைக் கொண்டு மட்டன் பிரியாணியானது தயாரிக்கப்பட்டது... விடிய விடிய பிரியாணி தயாரிக்கப்பட்டு இன்று காலை முதல் 1 கிலோ மட்டன் பிரியாணி ஆயிரம் ரூபாய் என்ற விலையில், விற்பனையானது... மேலும், ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் பிரியாணி வழங்கப்பட்டது... இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரும், பிரியாணி வாங்கிச் சென்றனர்...


Next Story

மேலும் செய்திகள்