திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் மறைவு... முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

x

மறைந்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வத்தின் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். திமுகவின் தலைமை நிலைய செயலாளரும், ஆயிரம் விளக்கு முன்னாள் எம்.எல்.ஏவுமான கு.க.செல்வம், உடல் நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், நேரு, பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கு.க.செல்வத்தின் இறுதி ஊர்வலம் மற்றும் நல்லடக்கம் இன்று நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்