யானை மிதித்து ஒருவர் பலி...விவசாயம் பண்ணவா? பிச்சை எடுக்கவா? - ஆதங்கத்தை கொட்டிய விவசாயி

x

கடந்த 10 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் இருந்து வந்த 2 காட்டு யானைகள் மகராஜாகடை வனப்பகுதியில் சுற்றித் திரிந்து அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தின... இன்று அதிகாலை மகராஜகடை அருகேயுள்ள பூக்கவுண்டனூரை சேர்ந்த 55 வயது சாம்பசிவம் என்பவர் தனது தோட்டத்தில் அறுவடை செய்ய சென்ற போது ஒற்றைக் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்... இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அவரது உடலை கொண்டு வந்து மகராஜகடை - கிருஷ்ணகிரி சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்... தொடர்ந்து யானைகள் நடமாட்டம் உள்ளதாக வனத்துறையினருக்கு பலமுறை தெரிவித்தும் வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். உடனடியாக காட்டு யானைகளை விரட்டி, இறந்தவர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்... சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது... மேலும் இந்த ஒற்றைக் காட்டு யானை தாக்கியதில் கடந்த மாதம் பெரிசக்கனாவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்