மாற்றப்பட்ட விமான நேரம் - அதிர்ச்சியில் பயணிகள் Airport | Salem | Chennai

x

மாற்றப்பட்ட விமான நேரம் - அதிர்ச்சியில் பயணிகள்

சேலத்தில் இருந்து சென்னைக்கு மதியம் நேரத்தில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை மாலையில் இயக்கப்படுகிறது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்டு 11.40 மணிக்கு சேலம் செல்லும் விமானம் மீண்டும், பிற்பகல் 12.40 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு சென்னை வருவது வழக்கம். இந்நிலையில் சேலத்தில் இருந்து புறப்படும் விமான சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி, மாலை 5 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்படும் விமானம் மாலை 6 மணிக்கு சென்னை வந்து சேருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதியம், மாலை என இரு வேளைகளிலும் விமானத்தை இயக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்