காய்ச்சலா...? உடனே இதை பண்ணிடுங்க..சுகாதாரத்துறை உத்தரவு..! | Tamilnadu

x

லேசான காய்ச்சல், இருமல், தீவிர காய்ச்சலுடன் உள்ள குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய்கள் இருப்பவர்கள் பரிசோதனை தேவையின்றி வீட்டுத்தனிமையில் இருந்தாலே போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றுடன் மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, இரத்த அழுத்த குறைவு ஆகியவை இருந்தாலோ, குழந்தைகளுக்கு இடைவிடாத தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தாலோ இன்புளூயன்சாவை கண்டறிவதற்கான RT PCR பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆய்வகங்களில் பணிபுரிவோர் கட்டாயம் N85 முகக்கவசமும், மற்ற அனைவரும் மூன்றடுக்கு முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர, மருத்துவமனைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும், கர்ப்பிணிகள் மற்றும் இணைநோயுள்ளோரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்