5 டன் அரிசி, 8 டன் காய்கறி.. பின் குறிப்பு : 500 கிலோ தக்காளி - 50 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து

x

சிங்கம்புணரியில், ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு அன்னதான நிகழ்ச்சிக்காக சமையல் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றது..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாத சாமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்காக 37ம் ஆண்டு அன்னதான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், 500 கிலோ தக்காளி, 5 டன் அரிசி, 8 டன் காய்கறிகள் மற்றும் 4 டன் மளிகை பொருட்கள் உடன் 120 சமையல் கலைஞர்களைக் கொண்டு, தடபுடலாக சமையல் தயாரானது. முன்னதாக அடுப்பில் அக்கினி ஏற்றி சமையல் பணியை துவக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அன்னதான குழுவினர் சிறப்பு பூஜைகளை செய்து சமையல் பணியை தொடங்கி வைத்தனர். இன்று நடைபெறும் சிறப்பு அன்னதான விழாவில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்