"குடும்ப ஆட்சியே காரணம்" முதல்வர் மீது அண்ணாமலை கடும் தாக்கு

x

தெலங்கானாவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் முதல்வர் கேசிஆரின் குடும்ப ஆட்சியே காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சட்டசபையில் தன்னைப் பற்றி பேசி கேசிஆர் நேரத்தை செலவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கேசிஆரோ, தமிழக முதல்வர் ஸ்டாலினோ, முதல் தேர்தலிலேயே வெற்றி பெறவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார். மக்களின் நம்பிக்கையை பெறுவதை இலக்காக கொண்டிருந்தால், தேர்தல் வெற்றி தோல்வி எல்லாம் ஒரு விஷயமாகவே இருக்காது என குறிப்பிட்டுள்ள அவர், தெலங்கானா மக்களின் நம்பிக்கையை கேசிஆர் இழந்து விட்டார் என நினைப்பதாக விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்